மருத்துவர் கபீல் கான் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து..! அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு..!

1 September 2020, 12:27 pm
dr_kafeel_khan_updatenews360
Quick Share

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் கபீல் கானை உடனடியாக விடுவிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலிகார் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பிப்ரவரி 13 அன்று கானுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டார். கபீல் கானை தடுத்து வைக்க அதிகாரிகள் சமர்ப்பித்த காரணங்கள் போதுமானதாக இல்லாததால் உத்தரவு சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் கூறியது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்களின் போது 2019 டிசம்பர் 10’ஆம் தேதி அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்ட மருத்துவர் கபீல் கான் ஜனவரி 29 முதல் சிறையில் உள்ளார்.

கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரியில் 2017’ஆம் ஆண்டு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் முதலில் ஆபத்தபாந்தவராக பிரச்சாரம் செய்யப்பட்ட கபீல் கான் தான் இந்த சோகத்திற்கு முதன்மைக் காரணம் என பின்னர் தெரியவந்ததை அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உத்தரபிரதேச அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய அவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பங்குபெற்று வன்முறையைத் தூண்டும் விதமாக பேசி கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து தற்போது அவர் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் அவர் சிறையிலிருந்து வெளியே வர உள்ளார்.

Views: - 5

0

0