மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு..! தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்..!

9 April 2021, 3:20 pm
Mamata_Banarjee_UpdateNews360
Quick Share

மேற்கு வங்காளத்தின் நந்திகிராமில் கடந்த மார்ச் 10’ம் தேதி மம்தா பானர்ஜி காயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

வக்கீல் விவேக் நாராயண் சர்மா மூலம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு, மேற்கு வங்க தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த வன்முறை சம்பவங்களை ஆராய்வதற்கான அதிகாரங்களைக் கொண்ட ஒரு தற்காலிக அமைப்பை உருவாக்க வலியுறுத்தியது. இது மேலும் சிபிஐ விசாரணையையும் கோரியது. 

மம்தா பானர்ஜி மீது தாக்குதல் என குற்றம் சாட்டப்படுவது ஒரு அரசியலமைப்பு பதவியை வகிக்கும் நபருக்கு எதிரானது என்றும், தேர்தல் மீதான வாக்காளர்களின் நம்பிக்கையை இது தடுக்கக்கூடும் என்றும் பொதுநல வழக்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் தேர்தல் நடைமுறைகளை பாதிக்கக்கூடிய இதேபோன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கான உத்தரவுகளையும் இந்த மனு கோரியது.

இந்த விவகாரத்தை விசாரித்த, ​இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான ​ மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், மனுதாரர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்று கூறினார்.

Views: - 33

0

0