அமர்நாத் குகைக்கோவில் யாத்திரை… ஜூன் 23ல் தொடங்கும் என்று அறிவிப்பு

14 February 2020, 8:46 pm
Amarnath 01 updatenews360
Quick Share

அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான நடப்பு ஆண்டு யாத்திரை, வரும்  ஜூன் 23ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


காஷ்மீரில், இமயமலைப்பகுதியில் பாதல்காம், அனந்த்நாக் இடையே அமைந்துள்ளது, புகழ்பெற்ற அமர்நாத் பனிலிங்க திருக்கோயில். இந்த குகைக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.

இந்தியாவில் கோடைகாலமாக கருதப்படும் மே முதல் ஆகஸ்ட் வரையில் இந்த பனிலிங்கம் தானாக கால சூழ்நிலையால் உருவாகின்றது. இவ்வாறு இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வது வழக்கம்.

அவ்வகையில், நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை, ஜூன் 23ம் தேதி துவங்குகிறது என, ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த யாத்திரை, 42 நாட்கள் நடைபெற்று ஆகஸ்ட் 3ம் தேதியுடன் நிறைவடையும் என்று ஜம்மு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply