கொரோனா நோய்த்தொற்று குறைந்தாலும் இது அவசியம்..! பிரதமர் மோடி எச்சரிக்கை..!

Author: Sekar
13 October 2020, 4:46 pm
Modi_UpdateNews360
Quick Share

ஏறக்குறைய இரண்டு மாதங்களில் கொரோனா நோய்த்தொற்றுக்களில் இந்தியா மிகக் குறைவான தினசரி கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களை, ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

தொற்று நோய்க்கு எதிரான போரில் நாடு வெல்லும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் அதே வேளையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்கிறது என்று பிரதமர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பாலசாஹேப் விகே பாட்டீலின் சுயசரிதையை வெளியிட்டு, அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள பிரவர கிராம கல்வி சங்கத்தின் பெயரை விகே என மாற்றும் வீடியோ கான்பரன்சிங் கூட்டத்தில் அவர் பேசினார்.

சமூக இடைவெளிக்கான விதிமுறைகள் மற்றும் பயனுள்ள தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

“கொரோனா வைரஸின் ஆபத்து இன்னும் நீடிக்கிறது. மகாராஷ்டிராவில், நிலைமை இன்னும் கொஞ்சம் கவலை அளிக்கிறது. எல்லோரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். முககவசம் அணிந்துகொள்வதையும் சமூக இடைவெளியை கைவிட்டும் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கவனக்குறைவு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது” என்று அவர் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களில் 55,342 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் நாடு மிகக் குறைந்த ஒற்றை நாள் அதிகரிப்பை பதிவு செய்தபோதும் பிரதமர் மோடியின் எச்சரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட முந்தைய 90,000’க்கும் அதிகமான எண்ணிக்கையிலிருந்து கூர்மையான வீழ்ச்சியைக் கண்டது.

செப்டம்பர் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 24 மணி நேரத்தில் 90,000 க்கும் குறைவான புதிய தொற்றுநோய்களை நாடு அறிவித்த ஐந்தாவது நாள் இதுவாகும்.

நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 71.75 லட்சமாகவும், இறப்பு எண்ணிக்கை 1,09,856 ஆகவும் உள்ளது என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்குப் பிறகு உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடு இந்தியாவாகும். அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பிறகு உலகளாவிய இறப்புகளைப் பொறுத்தவரை இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 46

0

0