அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..! மீண்டும் கொரோனா தொற்றா..?

18 August 2020, 10:48 am
Amit_Shah_UpdateNews360
Quick Share

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, செவ்வாய்க்கிழமை டெல்லியின் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக ஆகஸ்ட் 14’ஆம் தேதி, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என  செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

உள்துறை அமைச்சருக்கு ஆகஸ்ட் 2’ம் தேதி கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி குருகிராமின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமித் ஷா சமூக ஊடகங்களில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.

“எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்று அமித் ஷா முன்பு கூறியிருந்தார்.

பின்னர் கொரோனாவிலிருந்து குணமாகியதையும் அமித் ஷா ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்உறுதிப்படுத்தினார்.

“இன்று எனது கொரோனா வைரஸ் சோதனை அறிக்கை எதிர்மறையாக வந்துள்ளது. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆசீர்வதித்து, எனது நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அமித் ஷா ட்வீட் செய்திருந்தார்.

எனினும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பேன் என்று அவர் கூறினார்.

மற்றொரு ட்வீட்டில், தனக்கு சிகிச்சையளித்த மற்றும் அவரை கவனித்துக்கொண்டதற்காக உள்துறை அமைச்சர் மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 35

0

0