பேன்ட் – சட்டை அணிந்து வீதிகளில் உலா வந்த யானை! ஹார்ட்டினில் அம்பு விடும் நெட்டிசன்கள்

6 March 2021, 8:20 pm
Quick Share

இந்தியாவில் யானை ஒன்று, ஜீன்ஸ் டி–சர்ட் அணிந்து கொண்டு சாலையில் வலம் வர, அதனை ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக ‘எலி–பேன்ட்’ என பகிர்ந்தார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது கவனத்தை ஈர்க்கும் போட்டோ, வீடியோக்களை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர் பகிர்வது அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், அது எப்படியும் வைரலாகிவிடும். அப்படி தான் அவர், யானை ஒன்று பேன்ட், டி–சர்ட் அணிந்து கொண்டு சாலையில் உலா வரும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி உள்ளது. நம்பமுடியாத இந்தியா.. ‘எலி–பேன்ட்’ என நகைச்சுவையாக தலைப்பிட்டு போட்டோவை அவர் பகிர்ந்திருக்கிறார்.

இது ஒரு காணக்கிடைக்காத அரிய காட்சி என அவர் பகிர, விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு மிருகத்திற்கு இதுபோன்ற காரியத்தை செய்வது கொடூரமானது எனவும், இதனால் அது அசவுகரியமாக உணரும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், காடுகளில் கம்பீரமாக வலம் வரும் யானைகளை, அவற்றின் குடும்பத்திலிருந்து பிரித்து, சர்க்கஸ், உயிரியல் பூங்காக்களில் சிறைபிடிக்கப்படுவது மிகவும் கொடுமையானது என கருத்து பதிவிட்டுள்ளார்.

ஒருவர், பகர்வுக்கு நன்றி தெரிவித்து, இது உண்மையில் நம்ப முடியாத இந்தியா தான். வனவிலங்கு ஆர்வலர்கள் என்ன சொன்னாலும் அது உண்மை தான். யானைகள் காட்டில் இருந்தாலும், வளர்ப்பு யானையாக இருந்தாலும், தீங்கு செய்யாது என கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “மிகவும் ஆக்கபூர்வமான யோசனை மற்றும் நேர்த்தியான நடைபயிற்சி பார்க்க மரியாதையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

Views: - 8

0

0