குடியிருப்பு பகுதியில் பழமையான வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்து விபத்து : அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 3:49 pm
Building Collapsed - Updatenews360
Quick Share

கர்நாடகா : பெங்களூரு அருகே பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு மேலாக பெங்களூருவில் கனமழை பெய்து வந்த நிலையில் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்சன் கார்டன் பகுதியில் 1962ஆம் ஆண்டு நஞ்சப்பா என்பவர் கட்டிய வீடு முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

மேலும் இந்த வீட்டில் மெட்ரோ பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்காக நஞ்சப்பா வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலையில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் வீட்டில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று இரவே அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனே வேறு இடத்திற்கு காலி செய்தனர். இதையடுத்து இந்த வீடு இன்று இடிந்து விழுந்தது. முன்னரே காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் எந்த உயிர்சேதமும் காயமும் ஏற்படவில்லை.

மேலும் இந்த வீட்டின் உரிமையாளர் நஞ்சப்பா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடு தரைமட்டமாக இடிந்து விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 142

0

0