டியூஷன் படிக்கச் சென்ற மாணவர்களை குடும்பத்தோடு தாக்கிய கொரோனா..! ஆந்திராவில் அதிர்ச்சி..!

3 October 2020, 2:15 pm
coronavirus_students_updatenews360
Quick Share

ஆந்திராவில் டியூஷன் படிக்கச் சென்ற 14 மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியர் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆந்திர பிரதேச அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிப்பிற்குள்ளான மாணவர்கள் அனைவரும் 12 வயதுக்கு குறைவானவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். 

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் ஒரு தம்பதியினர் நடத்தும் டியூஷன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த தம்பதியினருக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு ​மாணவர்களில் ஒரு சிலரின் பெற்றோர்களும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

8 முதல் 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் ஒரு பொதுவான இடத்தில் கல்வியில் கலந்துகொண்டுள்ளதாக பட்லூரு கிராமத்தின் பி.எச்.சி, டாக்டர் சேசு குமார் அளித்த அறிக்கையில் தெரித்துள்ளார்.

“செப்டம்பர் 25 அன்று, குண்டூர் அரசு மருத்துவமனையில் ஒருவர் கொரோனா நோயால் இறந்தார். இதுவரை அவர் இருந்த பகுதியில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத ஒரு பசுமை மண்டலமாக இருந்தது. இந்நிலையில் 250 பேரை நாங்கள் பரிசோதித்ததில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14 பேர் 8 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.” என சேசு குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நரசராபேட்டையில் உள்ள ஒரு ஜூனியர் கல்லூரியில் பணிபுரிகிறார் என்றும், அவரது மனைவி கர்ப்பமாக இருந்ததாகவும், பிரசவத்திற்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா நெறிமுறைகளை மீறியதற்காகவும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் நேரடி வகுப்புகளை நடத்தியதற்காகவும் மாவட்ட நிர்வாகம் ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Views: - 0

0

0