அதிக போதைக்காக சானிடைசர் குடித்த 3 பேர் பலி.! ஆந்திராவில் தொடரும் சோகம்.!!

3 August 2020, 12:04 pm
Sanitizer Alochol Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : அதிக போதைக்காக சானிடைசர் குடித்த மூன்று பேர் கடப்பாவில் மரணமடைந்த நிலையில் போலீசுக்கு பயந்து உடலை கிராம மக்களே அடக்கம் செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிச்சேடில் போதைக்காக சானிடைசர் குடித்தவர்களில் 16 பேர் இதுவரை மரணமடைந்து விட்டனர். இந்த நிலையில் கடப்பாவிலும் அதேபோன்ற சம்பவம் நடைபெற்றது.

கடப்பா மாவட்டத்தில் உள்ள பெண்ட்லிமரி கிராமத்தை சேர்ந்த சுமார் 10 பேர் நேற்று போதைக்காக சானிடைசரை குடித்தனர். அவர்களில் ஓபுலேஷ், பீமையா, சென்னகேசவலு ஆகியோர் நேற்று மாலை மரணமடைந்து விட்டனர்.

இதுபற்றிய தகவல் வெளியே தெரிந்தால் தங்கள் ஊருக்கு போலீசார் வந்து பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் மரணமடைந்த பீமையா உடலை கிராமத்தினர் ரகசியமாக தகனம் செய்து விட்டனர்.

மற்ற இரண்டு பேரின் உடல்களை ஏதே காரணத்தினால் பேச்சு,மூச்சு இல்லாமல் விழுந்துவிட்டனர் என்று கூறி கடப்பா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே இறந்துவிட்டனர். அவர்கள் இரண்டு பேரின் உடல்களும் தற்போது கடப்பா அரசு மருத்துவமனையில் உள்ளன.

இதையடுத்து இந்த விஷயம் இன்று காலை போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே அங்கு சென்ற போலீசா சானிடைசர் குடித்த பத்து பேரில் மீதி இருக்கும் ஏழு பேரையும் கடப்பா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.

அதிக போதைக்காக மதுவில் சானிடைசர் குடித்தும், மதுவில் சானிடைசர் குடித்தும் இதுவரை ஆந்திராவில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 11

0

0