மாஸ்க் போடுங்கனு கூறிய பெண்ணை கட்டையால் தாக்கிய ஓட்டல் மேலாளர்.!!

30 June 2020, 4:18 pm
Man Attack Lady -Updatenews360
Quick Share

ஆந்திரா : முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறிய பெண் ஊழியர் மீது அரசு அதிகாரி கட்டையை கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருக்கும் ஆந்திர மாநில சுற்றுலா துறை ஹோட்டலில் துணை மேலாளராக பணியில் இருப்பவர் பாஸ்கர் ராவ். அதே ஓட்டலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் வேலை விஷயமாக பாஸ்கர் ராவ் பேசினார்.

அப்போது கொரோனா பரவுவதற்கு எதிரான முக்கிய நடைமுறையான முகத்திற்கு மாஸ்க் அணிவதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். இது போன்று மாஸ்க் அணியாமல் எங்களிடம் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், படித்து பட்டம் பெற்று வேலைக்கு வந்த எனக்கு படிக்காத நீ அறிவுரை கூறுவது தவறு என்று கூறி உஷாராணியை அங்கிருந்த கட்டையால் தாக்கினார். இதனால் அலறி துடித்துக் கீழே விழுந்த பெண்ணை உதைத்து துன்புறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில் உஷாராணி அளித்த புகாரின் பேரில் துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.

துனை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.