வீட்டுமனை.. மாதம் ரூ.40 ஆயிரம் ஊக்கத் தொகை.. அரசு வேலை : ஒலிம்பிக் வீராங்கனையை கவுரப்படுத்திய முதல்வர்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2021, 1:34 pm
Andhra Hockey Player - Updatenews360
Quick Share

ஆந்திரா : டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்ற வீராங்கனைக்கு திருப்பதியில் வீட்டுமனை, மாதம் 40,000 ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி அணியில் பங்கேற்ற ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள எர்ரவாரிபாளையத்தை சேர்ந்த ரஜினி இன்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தாடேபள்ளியில் உள்ள அவருடைய முகாம் அலுவலகத்தில் சந்தித்தார்.

ரஜினிக்கு பொன்னாடை போர்த்தி, மலர்கொத்து அளித்து வரவேற்ற ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு 25 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தார். மேலும் திருப்பதியில் அவருக்கு ஒரு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யவும் ரஜினிக்கு மாதம் ரூபாய் 40 ஆயிரம் வருமானம் வரும் வகையில் பணி ஏற்பாடு செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் கல்வித்தகுதி அடிப்படையில் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் அப்போது உத்தரவிட்டார். முதல்வருக்கு நன்றி கூறிய வீராங்கனை ரஜினி எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று கூறினார்.

Views: - 304

0

0