வீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் : துவக்கி வைத்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்!!

21 January 2021, 12:21 pm
Andhra Ration Scheme- Updatenews360
Quick Share

ஆந்திரா : வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார்.

ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு வகையில் மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த பிரச்சாரத்தின் போது மக்களுக்காக வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Andhra Pradesh Chief Minister Y.S. Jagan Mohan Reddy (Photo: ANI)

அதன் படி இன்று வீடு வீடாக ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்தார். இதற்காக ரூ.830 கோடி செலவில் வாங்கப்பட்ட 9,260 வாகனங்களில் செயல்பாட்டை விஜயவாடாவில் தொடங்கி வைத்தார்.

Andhra Pradesh, Andhra Pradesh caste, caste corporations, Andhra Pradesh abc corporations, Andhra Pradesh castes, indian express

வீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்க கிராம பணியாளர்களை நியமனம் செய்த ஆந்திர அரசு அம்மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Views: - 0

0

0