ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் பதவி நீக்க கோரிய வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!!

16 November 2020, 10:52 am
Jagan SC - Updatenews360
Quick Share

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் பதவி நீக்க கோரிய வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் பதவி நீக்க கோரி வழக்கு குறித்து இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்கிறது.

இந்தியாவின் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் என்வி ரமணா. இவருக்கு முன் எஸ்ஏ போப்தே நீதிபதியாக இருந்தார். இந்த நிலையில் என்.வி ரமணா மீது குற்றம்சாட்டி ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டேவுக்கு கடந்த அக்.,6ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் ஆந்திய உயர்நீதிமன்றத்தில் சில நீதிபிதிகள் எந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதில் என்.வி ரமணா தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டினார். என்வி ரமணாவுக்கும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாவு நாயுடுவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அமராவதி ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்படும் முன்பு அங்கு ரமணாவின் மகள்களின் சில நில ஒப்பந்தங்கள் தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்ததாகவும் எட்டு பக்க கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஒரு மாநில முதலமைச்சர் குற்றம்சாட்டி கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. இந்த கடிதத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப் குமார் யாதவ், எஸ்.கே.சிங் ஆகியோர், ‘முதல்வர் பொறுப்பிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டியை நீக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

பண மோசடி, ஊழல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் ஜெகன் மோகன் மீது உள்ளன. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்தியாவின் இரண்டாவது மூத்த நீதிபதி குறித்து கடிதம் எழுதியதற்காக ஜெகன் மோகனை முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். தனிப்பட்ட நலனுக்காக தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி நீதிமன்றத்தை இழிவுபடுத்தியுள்ளார். இது குறித்துஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்லது முன்னாள் நீதிபதிகளைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளது.

Views: - 39

0

0