2 கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல் : ஆந்திர மக்கள் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2021, 3:49 pm
Andhra Sea -Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆந்திர கடலோரத்தில் இரண்டு கிலோமீட்டர் தூரம் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அந்தர்வேதி சமீபத்தில் வங்காள விரிகுடா நேற்று சுமார் 2 கிலோமீட்டர் தூரம் உள்வாங்கியது.

அந்தர்வேதி பகுதியில் கோதாவரி நதி வங்கக் கடலில் கலக்கிறது. அந்த பகுதியில் ஏராளமானோர் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென்று அங்கு கடல் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்வாங்கி தரை தெரிய தொடங்கியது.

மேலும் சில இடங்களில் கடல் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இப்படி அந்தர்வேதி பகுதிகளில் கடலில் வெவ்வேறு நிலைகள் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Views: - 211

0

0