ரயில் முன் பாய்ந்து தற்கொலை..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி..!

5 November 2020, 10:35 am
Death_UpdateNews360
Quick Share

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில்  உள்ள பன்யம் மண்டலத்தின் கவுலூரு கிராமத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

45 வயதான ஷேக் அப்துல் சலாம், அவரது மனைவி நூர்ஜெஹான், மகள் சல்மா மற்றும் மகன் தாதா கலந்தர் ஆகியோர் நேற்று காலை 11:30 மணியளவில் சரக்கு ரயில் முன் பாய்ந்து  கொண்டனர்.

“அவர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, ரயில் ஆபரேட்டர்கள் இந்த சம்பவம் குறித்து அரசு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நாங்கள் சிஆர்பிசி பிரிவு 174’இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்று ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக சலாம் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்றும், தங்க நகைக் கடையில் இதனால் வேலை இழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் ஜாமீன் பெற்று வெளியில் வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட ஆட்டோ ரிக்‌ஷாவை ஓட்டிக்கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று, ஒரு தனியார் பள்ளி ஆசிரியரான தனது மனைவியை பள்ளியில் தானே கொண்டு விடுவதாகக் கூறியதோடு, நந்தியாலில் இருந்து 10’ஆம் வகுப்பு மாணவியான தனது மகள் மற்றும் நான்காம் வகுப்பு மாணவனான மகன் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு, பன்யம் மண்டலத்தில் உள்ள கவுலூரு ரயில் நிலையத்திற்குச் சென்று இந்த கோர முடிவை எடுத்துள்ளனர்.

அவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Views: - 18

0

0