காதலியின் கழுத்தை அறுத்து கொலை… சாலையிலேயே தற்கொலைக்கு முயன்ற காதலன்.. ஆந்திராவை உலுக்கிய சம்பவம்

Author: Babu Lakshmanan
31 May 2024, 1:34 pm
Quick Share

திருமணம் நிச்சயக்கப்பட்ட காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தற்கொலைக்கு முயன்ற காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏலூரை சேர்ந்த இளம் பெண் ஜாகுலர் ரத்னா கிரேஸ் (22). தனியார் கல்லூரி ஒன்றில் ரத்னா கிரேஸ் பணியாற்றி வருகிறார். அவருடன் பள்ளியில் துவங்கி கல்லூரி வரை ஒன்றாக படித்த வாலிபன் ஏசு ரத்தினம் (22).

இரண்டு பேரும் காதலித்து வந்த நிலையில், அந்த காதலை விரும்பாத ரத்னா கிரேஸ் பெற்றோர் தங்களுடைய மகளுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்திருந்தனர்.

மேலும் படிக்க: பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை… அதிகாரிகள் நடத்திய திடீர் ரெய்டு.. வசமாக சிக்கிய மருந்து கம்பெனி!!!

இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் ஏலூரில் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொண்டனர். அப்போது, இரண்டு பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இயேசு ரத்தினம் தான் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரத்னா கிரேஸ் மீது தாக்குதல் நடத்தி அவருடைய கழுத்தை அறுத்தார்.

மேலும், தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். ரத்த வெள்ளத்தில் இரண்டு பேரும் சரிந்து விழுவதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்தனர் .

ஆனால் அதற்குள் ரத்னா கிரேஸ் இறந்துவிட்டார். உடலில் இருந்து அதிகம் ரத்தம் வெளியேறிய காரணத்தால் மயக்கம் அடைந்த ஏசு ரத்தினம் தற்போது ஏலூரூ அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏசு ரத்தினம் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏசு ரத்தினம் தற்போது போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.

Views: - 184

0

0