அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கிய ஆந்திர அரசு : முதல்வர் புகைப்படத்துக்கு காளஹஸ்தியில் பாலபிஷேகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2022, 10:01 am
Andhra - Updatenews360
Quick Share

ஆந்திரா :அரசு ஊழியர்களுக்கு 23 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கிய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி படத்திற்கு காளஹஸ்தியில் தங்கத்தாமரை மலர்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆந்திர அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு இருபத்தி மூன்று சதவீதம் அளவிற்கு ஊதிய உயர்வு அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட கமிட்டி 14.29 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் அதிரடியாக ஆந்திர அரசு அதனுடைய ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தின் அடிப்படையில் இம்மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்புகள் ஆகியவை நன்றி தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தங்களுக்கு 23 சதவீதம் அளவிற்கு ஊதிய உயர்வு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காளஹஸ்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இன்று அவருடைய படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து தங்க தாமரை மலர்களால் அவருடைய படத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டது.

Views: - 352

0

1