டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி ; குண்டூரில் சோகம்…!!

Author: Babu Lakshmanan
5 June 2023, 9:05 pm

குண்டூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பத்திப்பாடு மண்டலம் கொண்டேப்பாடு கிராமத்தை சேர்ந்த 22 பேர் டிராக்டரில் செருக்கூரு வழியாக பொன்னூறு மண்டலம் ஜுப்பிடு கிராமத்தில் நடைபெறும் சுப நிகழச்சியில் பங்கேற்க புறப்பட்டனர்.

இந்த டிராக்டர் வட்டிச்செருகூறு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது டிரைவர் அலட்சியத்தால் சம்பவ இடத்திலேயே 6 பேர் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் மிக்கிலி நாகம்மா, மாங்கொடி ஜான்சிராணி, கட்டா நிர்மலா, கரிகாபுடி மேரிம்மா, கரிகாபுடி ரத்னகுமாரி மற்றும் கரிகாபுடி சுஹாசினி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவ இடத்தை எஸ்.பி. ஹாரிப் அபிஸ் நேரில் பார்வையிட்டு மீட்டு பணியில் ஈடுபட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!