ரூ.150 கோடி மோசடி.! சிக்கிய தலைமறைவானவனுக்கு தர்ம அடி!!

7 August 2020, 2:26 pm
Telangana Fraud - Updatenews360
Quick Share

தெலுங்கானா : பார்மா கம்பெனி துவக்குகிறேன் என்று கூறி 150 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவனை பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டையை சேர்ந்தவர் திருப்பதி ரெட்டி. இவர் கன்சல்டிங் நிறுவனம் ஒன்றின் துணையுடன் இரண்டு பார்மா கம்பெனிகளை ஐதராபாத்தில் துவக்குவதற்கு அனுமதி பெற்றார்.

அந்த அனுமதியை பலரிடம் காண்பித்து , எனக்கு தெலுங்கானாவில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பல முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி அவர்களுடைய பெயர்களையும் எடுத்து சொல்லி நீங்களும் முதலீடு செய்யுங்கள் என்று சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆகிவிட்டார்.

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின் ஹைதராபாத்தில் இருப்பதை தெரிந்து கொண்ட முதலீடு செய்தவர்கள் அவரை தேடி கண்டு பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யார் யாரென்று விசாரணை செய்து பட்டியலிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களை சேர்ந்த அரசியல்வாதிகளின் குடும்பங்களை சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் திருப்பதி ரெட்டியிடம் முதலீட்டிற்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Views: - 1

0

0