செப்., 21ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு! 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடக்கம்!!

8 September 2020, 9:12 am
Andhra School - Updatenews360
Quick Share

ஆந்திராவில் வரும் செப்டம்பர் 21அம் தேதி 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த 5 மாதங்களாக இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்வில்லை. பல்வேறு தளர்வுகள் மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும், பள்ளி கல்லூரி திறக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளை கடைபிடித்து ஆந்திர அரசு செப்டம் 21ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

இதே போல பிளஸ் 1 , பிளஸ் 2 ஜுனியர் கல்லூரிகளையும் திறக்கலாம் எனக் கூறியுள்ளது. அதே போல பிஎச்டி படிப்பிறக்ன வகுப்புகளும் சில கட்டுப்பாடுகளோடு தொடங்கப்படுகிறது.

செப்டம்ர் 21ஆம் தேதி முதல் நூறு பேர் பங்கேற்ககூடிய அளவில் அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்தலாம் எனவும், திறந்தவெளி திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0