குறட்டையால் பணத்தை கோட்டை விட்ட திருடன்!!

16 September 2020, 4:47 pm
Andhra Thief - updatenews360
Quick Share

ஆந்திரா : திருட சென்ற இடத்தில் கட்டிலுக்கு அடியில் அயர்ந்து தூங்கியதால் திருடன் வசமாக மாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோக்கவரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த திருடன் சூரி பாபு என்பவன் படுக்கை அறைக்கு சென்றுள்ளான்.

இந்த நிலையில் படுக்கை அறைக்கு ஸ்ரீநிவாஸ் ரெட்டி வந்துள்ளார். இதனால் திருடன் கட்டிலுக்கு கீழ் ஒளிந்துகொண்டான்.
ஸ்ரீநிவாஸ் ரெட்டி தூங்கிய பின் வீட்டில் இருக்கும் பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி செல்லலாம் என்பது சூரி பாபுவின் திட்டம்.

ஆனால் நேற்று வசூலான பணம் முழுவதையும் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் கொட்டி சீனிவாஸ் ரெட்டி எண்ணி முடிக்க இரவு ஒரு மணி ஆனது. அதற்குள் கட்டிலுக்கு கீழ் தூங்கிவிட்ட திருடன் சூரி பாபு குறட்டை விட தொடங்கினான்.

கட்டிலின் கீழிருந்து குறட்டை சத்தம் கேட்பதை கவனித்த ஸ்ரீநிவாஸ் ரெட்டி, வீட்டுக்குள் திருடன் புகுந்து விட்டதை உறுதி செய்து உடனடியாக படுக்கை அறையிலிருந்து வெளியேறி கதவை தாளிட்டார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வந்து கட்டிலுக்கு கீழ் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்த திருடன் சூரி பாபுவை வெளியில் வரவளைத்து கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 0

0

0