தந்தை மீது அளவு கடந்த பாசம்.! மகள்கள் செய்த விபரீதம்.!!

8 August 2020, 7:29 pm
Andhra dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : மருமகன் தினமும் மகளை அடித்து துன்புறுத்தியதால் மனம் தாங்காத தந்தை தற்கொலை செய்ததால் இரு மகள்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர் பாபு ரெட்டி. அவருடைய மகள்கள் ஸ்வேதா(வயது 26), சாயி(வயது 20). ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் சாயி இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இரண்டு மகள்களையும் மிகவும் பாசத்துடன் பாபு ரெட்டி வளர்த்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு ஸ்வேதா வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அவருடைய கணவன் சுரேஷ் குமார் ரெட்டி ஸ்வேதாவை தினமும் அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்தினார்.

மகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை மனரீதியாக தாங்க இயலாத பாபு ரெட்டி தன்னுடைய மரணத்திற்கு
மருமகன் சுரேஷ்குமார் ரெட்டி காரணம் என்று செல்பி வீடியோ பதிவு செய்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பாபு ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

இந்த நிலையில் பாசம் காரணமாக தந்தை தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த ஸ்வேதா, சாயி ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தில் நடைபெற்ற மூன்று பேர் தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார் சுரேஷ்குமார் ரெட்டியை பிடித்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 30

0

0