நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து.! தீயணைப்பு வீரர்கள் சாதுர்யத்தால் உயிர் சேதம் தவிர்ப்பு.!!

9 August 2020, 7:01 pm
Vizhag Ship Fire - Updatenews360
Quick Share

ஆந்திரா : விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் துறைமுக தீயணைப்பு துறையினர் ஆக்சிஜன் முக கவசங்கள் அணிந்து கப்பலுக்குள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றின் இன்ஜின் பகுதியில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக இன்ஜின் அறையில் கரும்புகை சூழ்ந்து கொண்டது. கப்பல் இன்ஜின் அறையிலிருந்து கிளம்பிய தீப்பொறி தீவிபத்தாக மாறியது.

விபத்து பற்றிய தகவல் அறிந்த துறைமுக தீயணைப்பு படையினர் ஆக்சிஜன் முக கவசங்கள் அணிந்து இஞ்சின் பகுதிக்குள் சென்று தீயை கட்டுப்படுத்தி, அங்கிருந்த பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். மேலும் தீயணைப்பு கப்பல்கள் மூலம் தீ விபத்தில் சிக்கிய கப்பல் மீது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது.

Views: - 3

0

0