மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு வந்த அச்சறுத்தல் அழைப்புகள்..! பின்னணியில் கங்கனா ரனவத் விவகாரம்..?

9 September 2020, 10:51 am
anil_deshmukh_updatenews360
Quick Share

நடிகை கங்கனா ரனவத் சம்பந்தப்பட்ட சர்ச்சை தொடர்பாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் எடுத்துள்ள நிலைப்பாட்டால் தொடர்ந்து தொலைபேசியில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறார்.

நேற்று மற்றும் இன்று காலை 6 மணியளவில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடமிருந்து அவருக்கு இந்த அழைப்புகள் வந்தன.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு அண்மையில் அவர் கூறிய கருத்துக்கள் குறித்து ரனவத் மகாராஷ்டிரா ஆளும் கட்சியினரின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.

முன்னதாக சனிக்கிழமையன்று, பாந்த்ராவில் உள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லமான மாதோஷ்ரீ’க்கும் இது போன்ற அழைப்புகள் வந்தன. அதில் அழைப்பவர் அதை வெடிவைத்து தகர்க்க உள்ளதாக அச்சுறுத்தியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அழைப்பவர் தப்பியோடிய மும்பை நிழல் உலக டான் தாவூத் இப்ராஹிமின் உதவியாளர் என்று கூறியிருந்தார்.  

ரனவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பை வழங்குவதற்கான மத்திய அரசின் முடிவு குறித்து தேஷ்முக் திங்களன்று ஆச்சரியம் தெரிவித்தார். மும்பை மற்றும் மகாராஷ்டிராவை தனது கருத்துக்களால் கங்கனா ரனவத் அவமதித்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போது, ஒரு அநாமதேய அழைப்பாளர் தேஷ்முகின் நாக்பூர் அலுவலகத்திற்கு போன் செய்தார். அதில் அனில் தேஷ்முக் மற்றும் என்சிபி தலைவர் சரத் பவாரை அச்சுறுத்தினார்.

இதையடுத்து இந்த விவகாரம் தற்போது மகாராஷ்டிர காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Views: - 8

0

0