திருப்பதியில் கனமழையின் கோரதாண்டவம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விலங்குகள், வாகனங்கள்…அதிர்ச்சி வீடியோ…!!

Author: Aarthi Sivakumar
19 November 2021, 9:35 am
Quick Share

ஆந்திரா: திருப்பதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மனிதன், வாகனங்கள், விலங்குகள் உட்பட அனைத்தும் அடித்து செல்லப்பட்ட பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக ஆந்திராவின் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இன்று காலை முதல் அதுதொடர் மழையாக மாறி அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் உள்ள சிவஜோதி நகரில் எருமைகள் அடித்து இழுத்து செல்லப்பட்டன. கடப்பா திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நபரொருவரை மழை வெள்ளம் இழுத்துச் சென்றது.

திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. திருப்பதியை பொருத்தவரை இது போன்ற அதிகன மழை இதற்கு முன்னர் எப்போதும் பெய்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

திருப்பதி நகரில் ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளத்திற்கு காரணம் நகரை சுற்றி இருந்த ஏரிகள்,குளங்கள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 403

1

0