75வது சுதந்திர தினம்: சீன ராணுவத்துடன் வீரமுடன் போரிட்ட 20 வீரர்களுக்கு விருதுகள் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
15 August 2021, 10:48 am
Quick Share

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 1,380 போலீஸார் வீர, தீர செயலுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 1,380 போலீஸார் வீர, தீர செயலுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட 20 பேர் இதில் அடங்குவர். இதுகுறித்து ஐடிபிபி செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே கூறும்போது, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லையை நாங்கள் பாதுகாத்து வருகிறோம்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன ராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட 20 பேர்உட்பட 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளனர். முதல்முறையாக அதிகம் பேருக்கு விருது கிடைத்துள்ளது என்றார்.

Views: - 208

0

0