ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு கௌரவம்: ஆக., 7ம் தேதி ஈட்டி எறிதல் தினமாக கொண்டாடப்படும் என அறிவிப்பு..!!
Author: Aarthi Sivakumar10 August 2021, 5:30 pm
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கௌரவிப்பதற்காக ஆகஸ்ட் 7ஆம் தேதி ‘ஈட்டி எறிதல் நாள்’ என்று பெயரிட இந்தியா தடகள சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இந்திய தடகள சம்மேளத்தின் திட்டக் குழு தலைவர் லலித் பனோட், இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று இந்தியா முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ம் தேதிஅன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
11 ஆயிரம் வீரர்களும், 200 நாடுகளும் கலந்துகொண்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 நான்கு வெண்கல பதக்கங்கள் என 7 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பிடித்தது.
0
0