ஹரியானாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் சுகாதார ஊழியர் மரணம்..!
22 January 2021, 8:05 pmகர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் நடந்த இதேபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு, கொரோனா தடுப்பூசியின் முதல் ஷாட்டை எடுத்த பின்னர் ஹரியானாவின் குருகிராமில் ஒரு சுகாதார ஊழியர் மரணமடைந்துள்ளார்.
தடுப்பூசி பெற்ற சில நாட்களில் 55 வயதான அந்த பெண் சுகாதார ஊழியர், தனது குருகிராம் வீட்டில் இன்று இறந்தார்.
இருப்பினும், அவரது இறப்புக்கு தடுப்பூசி தான் காரணம் என்பதை நிரூபிக்க இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று ஒரு மாநில அரசு அதிகாரி கூறினார்.
“அவருக்கு ஜனவரி 16’ஆம் தேதி கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் இன்று அவரது வீட்டில் திடீரென இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆனால் அதை தடுப்பூசியுடன் இணைக்க இதுவரை எதுவும் இல்லை” என்று குருகிராமின் தலைமை மருத்துவ அதிகாரி வீரேந்தர் யாதவ் கூறினார்.
இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
“நாங்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வந்தவுடன் விவரங்கள் வெளியிடப்படும்.” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
0
0