“குடும்பத்தை கவனிக்காதீங்க, கட்சியை கவனிங்க“ சோனியா காந்திக்கு வந்த கடிதம்!!

7 September 2020, 2:30 pm
Sonia Gandhi Letter - updatenews360
Quick Share

குடும்பத்தை விட கட்சியின் நலன்தான் முக்கியம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நபர் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் சத்யதேவ் திரிபாதி, முன்னாள் எம்.பி சந்தோஷ் சிங் உட்பட 9 பேர் சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என எழுதியுள்ளனர். மேலும் குடும்பத்தைவிட கட்சியின் நலன்தான் முக்கியம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் வளர்ச்சிக்காக ஜனநாயக மரபுகளை மீட்டெடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். கடிதம் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் எழுதியிருப்பது மீண்டும் சர்ச்சையாகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கட்சிக்கு பொருத்தமான தலைமை தேவை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி பெரும் விவாதம் ஆன நிலையில், இந்த கடிதம் சோனியா காந்திக்கு மேலும் நெருக்கடியை தரும் என கூறப்படுகிறது.

Views: - 12

0

0