செப்டம்பர் 12ல் நீட் தேர்வு: இன்று மாலை தொடங்குகிறது விண்ணப்ப பதிவு…!!

13 July 2021, 9:10 am
NEET_2021_UpdateNews360
Quick Share

சென்னை: நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்று மாலை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆயுஷ் மருத்துவ படிப்புகள் மற்றும் பி.எஸ்சி., நர்சிங் போன்றவற்றில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரத்தில் இந்த தேர்வு நடத்தப்படும்.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார். தேர்வில் பங்கேற்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 5 மணிக்கு துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி நீட் தேர்வு நடக்கும். இதற்காக தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டில் 3,862 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கையும் இந்த ஆண்டு அதிகரிக்கும். தேர்வுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் முக கவசம் வழங்கப்படும்.

தேர்வு மையத்தில் நுழையவும், வெளியேறவும் நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு வகை நேர அட்டவணை பின்பற்றப்படும். கொரோனா வழிகாட்டலை பின்பற்றி எந்த ஒரு தொடர்பும் ஏற்படாத பதிவு முறை, தேர்வு மையங்களில் முறையான கிருமி நீக்கம், சமூக இடைவெளியுடன் கூடிய இருக்கை அமைப்பு போன்றவையும் நீட் தேர்வில் உறுதி செய்யப்படும்.
கூடுதல் விபரங்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 137

0

0