இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு புதிய வகை கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம்? பிரபல மருத்துவமனையின் ஆய்வில் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2021, 1:14 pm
Blood Group Corona - Updatenews360
Quick Share

டெல்லி : டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நடத்திய ஆய்வில் எந்தெந்த ரத்த வகைகளுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற கொடிய நோயின் பாதிப்பால் ஏராளமான உயிர்கள் பறிபோனது. எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் நிர்கதிகளாயின. இந்த கொரேனா எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது, யார் காரணம் என்ற ஆய்வெல்லாம் ஆராய்ச்சி பண்ணுவதற்குள் உலக நாடுகளில் உள்ள மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்தனர்.

இதையடுத்து உலக நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. அந்த தடுப்பூசிகள் பலர் உயிருடன் இருக்க காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசிகள் தான் மருந்து என்று சொல்லமுடியாது, கொரேனா வீரியத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்ற கருத்துகளும் உலாவந்தன.

தற்போது தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மக்களும் நம்பியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை விட வீரியமான ஒமிக்ரான் என்ற தொற்று தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை கொரோனா பரவல் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வில் எந்த வதை ரத்த வகைகளுக்கு கொரோனா அதிகம் பரவும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

அதில் A,B மற்றும் Rh+ ரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. O,AB மற்றும் Rh- ஆகிய ரத்த பிரிவுகளை கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ABO மற்றும் Rh ரத்த குழுவின் தொடர்பு, கோவிட் 19 பாதிப்பு, முன்கணிப்பு, மீட்பு நேரம் மற்றும் இறப்பு ஆகியவற்றை ஆராய்ந்ததில் B ரத்த பிரிவை கொண்ட ஆண் நோயாளிகள் அதே ரத்த குழுவை கொண்ட பெண் நோயாளிகளை காட்டில் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் AB ரத்த பிரிவை உடைய 60 வயது மற்றும் அதற்கு குறைந்து வயதுடைய நோயாளிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Views: - 314

0

0