சீன எல்லையில் கடும் குளிரில் உள்ள இந்திய வீரர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கேம்ப்..! புகைப்படங்கள் வெளியீடு..!

18 November 2020, 5:37 pm
Ladakh_Smart_Camp_5_UpdateNews360
Quick Share

கடுமையான குளிர்கால மாதங்களில் செயல்பாட்டு செயல்திறனை உறுதி செய்வதற்காக கிழக்கு லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களுக்கும் நல்ல வாழ்விட வசதிகளை நிறுவுவதை இந்திய ராணுவம் நிறைவு செய்துள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் முகாம்களைத் தவிர, மின்சாரம், நீர், வெப்ப வசதிகள் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த ஏற்பாடுகளுடன் கூடிய அதிநவீன வாழ்விடங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளன என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

“முன்னணிப் படையினர் தங்கள் நிலைகளில் உள்ள சூடான கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக, எந்தவொரு அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான சிவில் உள்கட்டமைப்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.” என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் மே மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவும் சீனாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் சீன எல்லையை ஒட்டி குவிக்கப்பட்ட இந்திய வீரர்களுக்காக இந்த நவீன வாழ்விட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் மற்றும் நவம்பர் மாதத்திற்குப் பிறகு 40 அடி வரை பனிப்பொழிவை பெறும். கூடுதலாக, இப்பகுதிக்கான சாலை அணுகலும் குறுகிய காலத்திற்கு பாதிக்கப்படுகிறது.

இதனால், அனைத்து வாழ்விட சிக்கல்களையும் எதிர்கொள்ளும் விதமாக கிழக்கு லடாக்கில் வீரர்களுக்கு சிறந்த வாழ்விட வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.

“குளிர்காலத்தில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் செயல்பாட்டு திறனை உறுதி செய்வதற்காக, இந்த செக்டரில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களுக்கும் வாழ்விட வசதிகளை நிறுவுவதை இந்திய இராணுவம் முடித்துள்ளது” என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

1 thought on “சீன எல்லையில் கடும் குளிரில் உள்ள இந்திய வீரர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கேம்ப்..! புகைப்படங்கள் வெளியீடு..!

Comments are closed.