காஷ்மீரில் உறைய வைக்கும் பனியில் குக்ரி நடனம்: வைரலாகும் ராணுவ வீரர்களின் வீடியோ!!

Author: Aarthi Sivakumar
9 January 2022, 9:48 am
Quick Share

ஸ்ரீநகர்: உறைய வைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் தங்கள் கலைப்பை போக்கும் வகையில் பாரம்பரிய ‘குக்ரி’ நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய எல்லையில் நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அயராது பணியாற்றி வருகின்றனர். இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல் வலிமை மட்டுமல்லாது, மன வலிமையும் மிக அவசிமாகிறது.

இத்தகைய சூழலில் உடற்பயிற்சி, நடனம் ஆகியவை ராணுவ வீரர்களின் உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. அந்த வகையில் வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் நிலையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்கள், தங்கள் கலைப்பை போக்கும் வகையில் பாரம்பரிய ‘குக்ரி’ நடனத்தை ஆடினர்.

இந்த நடனம் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கூர்கா மக்களின் ஆயுதமான சிறிய வகை கத்தியை கைகளில் ஏந்தியபடி ராணுவ வீரர்கள் ஆடிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 286

0

0