அர்னாப் கோஸ்வாமியை அடித்துத் துன்புறுத்திய மும்பை போலீஸ்..? காயங்களை காட்டிய அர்னாப்..!

4 November 2020, 7:52 pm
Arnab_Goswami_UpdateNews360
Quick Share

இன்று காலை கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அலிபாக்கில் ஊடகங்களுடன் பேசிய போது காவல்துறையால் தாக்கப்பட்டு தனது கையில் ஏற்பட்ட காயங்களை பகிரங்கமாகக் காட்டினார்.

அவர் ஏற்கனவே மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர்களிடம் காயங்களைக் காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமாக, அவர் தனது வீட்டில் தாக்கிய போலீஸ்காரர்கள் அனைவரின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்.

இன்று காலை 7.45 மணியளவில் திடீரென மும்பை காவல்துறை ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்குள் நுழைந்து, கேமராக்களை அணைத்துவிட்டு அவரை பலவந்தமாக வெளியே இழுத்து சென்றுள்ளனர். காவல்துறை ஊழியர்கள் அர்னாப்பை அவரது மாமியாரிடம் மருந்துகளை ஒப்படைப்பதைத் தடுத்தது மட்டுமல்லாமல், அவரையும் அவரது மகனையும் உடல் ரீதியாக தாக்கினர். 

2018’இல் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் ஒரு வழக்கில் தற்போது அர்னாபை கைது செய்துள்ளதாக பின்னர் மும்பை காவல்துறை விளக்கமளித்துள்ளது. எனினும் இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லாததால் வழக்கை முடித்து வைப்பதாக முன்னர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் தற்போதைய கைது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே இன்று மாலை அலிபாக் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமியை ஆஜர்படுத்த காவல்துறை அழைத்து வந்தபோது, அவர் காவல்துறையால் ஏற்பட்ட காயங்களை செய்தியாளர்களிடையே அம்பலப்படுத்தினார்.

தன்னுடைய காயங்களுக்கு பிரதீப் பாட்டீல், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாஸ் மற்றும் 7 போலீஸ்காரர்கள் காரணம் என்று அர்னாப் கூறினார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவரைப் பிடித்துத் தள்ளியதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், அவர் தனது காலணிகளை அணியக்கூட காவல்துறை அனுமதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

அர்னாப் கோஸ்வாமி மேலும், “இது என் கையில் ஏற்பட்ட காயம். நீங்கள் அதை தெளிவாகக் காணலாம். நான் அதை மருத்துவர்களிடமும் காட்டியுள்ளேன்” என்று செய்தியாளர்களிடம் தனது காயங்களைக் காட்டினார்.

ஏற்கனவே சுஷாந்த் சிங் மரணம், போதைப்பொருள் விவகாரம் என மும்பை காவல்துறையின் மானம் கப்பலேறி நிலையில், தற்போது அர்னாப் கோஸ்வாமியின் மீது கை வைத்து இன்னும் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டுள்ளது.

Views: - 27

0

0