எலக்ட்ரிகல் வாகனங்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு..!!

4 February 2021, 5:20 pm
arvind kejriwal - updatenews360
Quick Share

புதுடெல்லி: எலக்ட்ரிகல் வாகனங்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் இல்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் குறைவு, வாகன போக்குவரத்து நெருக்கடி, தொழிற்சாலை கழிவுகள், புகை வெளியேற்றம் உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளாகி வருகின்றனர். வடமாநிலங்களில் ஒன்றான டெல்லி பனிக்காலத்தில் கடும் சோதனைக்குள்ளாகி வருகிறது.

கடும் பனி மூட்டம், தெளிவற்ற வானிலை ஆகியவற்றால், பெருமளவில் காலையில் ரயில், பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு புகையும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறுகையில், எங்களது தொலைநோக்கு திட்டத்தின்படி வரும் 2024ம் ஆண்டுக்குள் 25% புதிய வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும்.

இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் மானியம் வழங்கப்படும். இதுபோக எலெக்ட்ரிகல் வாகனங்களுக்கு சாலை வரி, பதிவு கட்டணம் போன்றவை இல்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தூய்மையான வாகனங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டெல்லியில் பிரசாரம் தொடங்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0