கொத்தடிமை, பெண் விடுதலைக்காக போராடிய சுவாமி அக்னிவேஷ் மறைவு..! தலைவர்கள் இரங்கல்..!

12 September 2020, 11:16 am
Swami_Agnivesh_UpdateNews360
Quick Share

பிரபல ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி அக்னிவேஷ் புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தில் கல்லீரல் சிரோசிஸ் நோய்க்கு சிகிஹ்ச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார்.

“செப்டம்பர் 11 அன்று, அவரது உடல்நிலை மோசமடைந்தது. மாலை 6 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மீண்டும் இருதயத் துடிப்பை அதிகரிக்க முயற்சித்த நிலையில், மாலை 6.30 மணியளவில் காலமானார். இந்த அன்பான தலைவரின் இழப்புக்கு ஐ.எல்.பி.எஸ் துக்கம் அனுசரிக்கிறது” என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

80 வயதான சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். மேலும் அவர் ஆர்யா சபா என்ற அரசியல் கட்சியையும் நிறுவினார், அது 1970’இல் ஆர்யா சமாஜின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. சுவாமி அக்னிவேஷ் மதங்களுக்கிடையில் உரையாடலுக்கான வக்கீலாகவும் இருந்தார்.

ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த 2011’ல் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா பிரச்சாரம் உட்பட பல சமூக இயக்கங்களில் அவர் ஈடுபட்டார். மேலும் பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சாரங்கள், பெண்களின் விடுதலை மற்றும் கொத்தடிமை உள்ளிட்ட சமூக செயல்பாட்டின் பல்வேறு துறைகளில் விரிவாக பணியாற்றினார்.

சுவாமி அக்னிவேஷின் மறைவுக்கு பல தலைவர்களும் மக்களும் தங்கள் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0