அத்துமீறும் சீன ஹெலிகாப்டர்களை அடித்துத் தூக்க அதிரடி முடிவு..! எல்லையில் சிறப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள இந்திய ராணுவம்..!

25 August 2020, 7:34 pm
LAC_Indian_Army_UpdateNews360
Quick Share

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு நெருக்கமாக மேற்கொள்ளப்படும் சீன ஹெலிகாப்டர்களின் நடவடிக்கைகளின் பின்னணியில், இந்திய ராணுவம் தோள்பட்டை மூலம் ஏவப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கொண்ட வீரர்களை அங்குள்ள உயரமான இடங்களில் நிறுத்தியுள்ளன.

“ரஷ்ய தயாரிப்பான இக்லா வான் பாதுகாப்பு அமைப்புடன் ஆயுதம் ஏந்திய இந்திய வீரர்கள், இந்திய வான் மண்டலத்தில் அத்து மீற முயற்சிக்கும் எந்தவொரு எதிரி விமானங்களையும் சுட்டு வீழ்த்த, எல்லையில் உள்ள முக்கியமான உயரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷ்யாவைச் சேர்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை இரண்டாலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் எதிரி போர் விமானங்கள் அல்லது ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்கு அருகில் வரும்போது இவை பயன்படுத்தப்படுகிறது.

அங்குள்ள எதிரிகளின் வான்வழி இயக்கத்தைக் கண்காணிக்க ரேடார்கள் மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியா கண்காணிப்பை மேம்படுத்தியுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 14 போன்ற பகுதிகள் உட்பட கிழக்கு லடாக் செக்டரில் மோதல் அதிகரித்த போது, ஏராளமான சீன ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் வர முயற்சித்ததை இந்தியப் படைகள் கவனித்தன.

கிழக்கு லடாக் பகுதியில் சீன ஹெலிகாப்டர்களால் ஏற்படக்கூடிய வான்வெளி அத்து மீறலைத் தடுக்க இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) மே முதல் வாரத்தில் தனது சு-30 எம்.கே.ஐ. தாக்குதல் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜின்ஜியாங் மற்றும் திபெத் பிராந்தியத்தில் உள்ள சீன ராணுவத்திற்கு சொந்தமான எஃப் இன் ஹோடன், கார் குன்சா, காஷ்கர், ஹோப்பிங், டொன்கா ட்சாங், லின்ஷி மற்றும் பங்கட் விமான தளங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவை அனைத்தும் சமீபத்திய காலங்களில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

சீன விமானப்படை சமீப காலங்களில் இந்த தளங்களை மேம்படுத்தியுள்ளது. இதில் கடினமான தங்குமிடங்களை நிர்மாணித்தல், ஓடுபாதை நீளங்களை விரிவாக்குதல் மற்றும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடுதல் மனிதவளத்தை பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு எதிரே உள்ள லின்ஷி விமானத் தளம் முக்கியமாக ஒரு ஹெலிகாப்டர் தளமாகும். மேலும் சீனர்கள் அந்த பகுதிகளில் தங்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ஹெலிபேட்களின் வலையமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.