பிரியங்காவின் டுவிட்டர் பதிவு..! நடிக்காதீர்கள், இந்துத்துவாவை ஏற்றுக்கொள்ளுங்கள்..! ஓவைசி காட்டம்

5 August 2020, 11:28 am
Quick Share

டெல்லி: ராமர் கோவில் பூமி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்திக்கு, அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் இப்போது ராமர் கோவில் கொண்டாட்டங்கள் தான் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அனைத்து கட்சியினரும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அப்படி ஒரு வாழ்த்து சொல்லி வகையாக வாங்கி கட்டிக் கொண்டு இருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருந்ததாவது:

தைரியம், கட்டுப்பாடு என பல குணங்களை ஒருங்கே அமைய பெற்றது தான் ராம் என்னும் பெயர். ராமர் நம் அனைவரிடத்திலும் இருக்கிறார். ராமர், சீதா இருவரின் அருள், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை பறைசாற்றும் சந்தர்ப்பமாக மாறும் என்று அதில் கூறி உள்ளார்.

அவரின் இந்த பதிவுதான் இப்போது அவருக்கே பூமராங்காக மாறி இருக்கிறது. இந்த பதிவை கண்டு கொதித்து போய் இருக்கிறார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி. அவர் காங்கிரசையும், பிரியங்கா காந்தியையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது: இந்த பதிவின் மூலம் அவர்கள்(காங்கிரசும், பிரியங்கா காந்தியும்) நடிக்கவில்லை என்பது தெரிகிறது. அதற்கு மிக்க மகிழ்ச்சி. இந்துத்துவாவை அவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.

ஆனால் சகோதரத்துவத்தை பற்றி எதற்கு ஆதரவான பேச்சு? வெட்கப்படாமல் பாபர் மசூதி இடிப்புக்கு காரணமான இயக்கத்துக்கு காங். கட்சி அளித்த பங்களிப்புகளை பற்றி பெருமிதமாக இருங்கள் என்று காட்டமாக கூறி இருக்கிறார்.

Views: - 12

0

0