சத்தியமா நம்புங்க… ஆசியாவிலேயே மிக சுத்தமான ஆறு இந்தியாவில்தான் இருக்கு..!!! எங்க தெரியுமா..?

Author: Babu Lakshmanan
12 August 2021, 7:41 pm
clean river 3- updatenews360
Quick Share

பொதுவாக அழிந்து போன, அழிந்து வருகின்ற ஆறுகள், நதிகள் பற்றியே நாம் அதிகம் கேள்விபட்டதுண்டு. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த போது, கங்கை நதியில் சடலங்கள் மிதந்து சென்ற அவலமும் அரங்கேறியது. ஆறுகளை புனிதமாக வணங்கும் நாம், இதுபோன்று சீர்கேடுகளையும் செய்து வருகின்றோம்.

இப்படியிருக்கையில், ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான ஆறு எங்குள்ளது என்று ஆய்வு நடத்தப்பட்ட போது, பெரும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி இந்தியர்களுக்கு கிடைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் பாய்ந்து வரும் நதி உம்காட். இந்த நதிக்கரையில்அமைந்துள்ளது மவுலினாங் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம்தான் ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமமாக இருந்து வருகிறது. இந்த கிராமம் 100 சதவிகித கல்வியறிவு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உம்காட் நதிதான் ஆசியாவிலேயே மிகவும் தூய்மையான நதி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நதியின் 10 அடி ஆழத்தில் உள்ள பாறைகள், ஓடும் மீன்கள் என அனைத்தும் தெளிவாகத் தெரியும். நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை, இந்த நதியை பார்க்க உகந்த காலம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 729

1

0