42 வங்கதேசத்தவர்கள் நாடு கடத்தல்..! அசாம் அரசு அதிரடி நடவடிக்கை..!

4 November 2020, 7:29 pm
migrants_updatenews360
Quick Share

பாஜகவின் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அசாம் அரசு கடந்த திங்களன்று 33 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்  என மொத்தமாக சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்து வந்த 42 வங்கதேசத்தவர்களை கண்டறிந்து நாடு கடத்தியுள்ளது.

இந்த 42 பேரும் அசாமின் சுதர்கண்டி எனும் இந்திய-வங்கதேச சர்வதேச எல்லையில் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பராக் பள்ளத்தாக்கின் கரிம்கஞ்ச் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

குவஹாத்தி, கரிம்கஞ்ச், சிவசாகர், கச்சார், தெற்கு சல்மாரா, சோனித்பூர், கர்பி அங்லாங் மற்றும் திமா ஹசாவ் உள்ளிட்ட அசாமின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது சிலர் கடந்த பல ஆண்டுகளாக அசாமில் வசித்து வந்ததும், அவர்களை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் சட்டவிரோத குடியேறிகள் என்றும் அறிவித்திருந்தது கண்டறியப்பட்டது.

கரீம்கஞ்ச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயங்க் குமார், “அசாமின் ஒன்பது மாவட்டங்களில் இருந்து பங்களாதேஷ் பிரஜைகள் கண்டறியப்பட்டுள்ளார்கள். 42 பேரில் எட்டு பேர் கச்சரைச் சேர்ந்தவர்களும், மூன்று பேர் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும்.

குவஹாத்தி அரசு ரயில்வே காவல்துறை மூலம் 25 பங்களாதேஷ் பிரஜைகளும் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் 2-3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். நாங்கள் அவர்களை சட்ட நடைமுறைகள் மூலம் நாடு கடத்தியுள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் அசாம் 50 பங்களாதேஷ் பிரஜைகளை அந்த நாட்டிற்கு நாடு கடத்தியது. முந்தைய ஐந்து ஆண்டுகளில், 2015 மற்றும் 2019’க்கு இடையில் 15,012 பங்களாதேஷ் குடிமக்களுக்கு இந்திய தேசிய குடியுரிமை வழங்கப்பட்டது.

இந்தோ-பங்களாதேஷ் நில எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, 14,864 பங்களாதேஷ் பிரஜைகளுக்கு 1955 குடியுரிமைச் சட்டத்தின் 7’வது பிரிவின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0

1 thought on “42 வங்கதேசத்தவர்கள் நாடு கடத்தல்..! அசாம் அரசு அதிரடி நடவடிக்கை..!

Comments are closed.