அசாமில் குவியல் குவியலாக மீட்கப்பட்ட ஆயுதங்கள்..! போடோலாந்து தேர்தலை சீர்குலைக்க சதித்திட்டமா..?

19 August 2020, 2:01 pm
Bodoland_Arms_Seized_Updatenews360
Quick Share

போடோலாண்ட் பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அசாமில் 2020 ஏப்ரல் 4’ஆம் தேதி நடைபெறவிருந்தன. ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

புதிய தேர்தல் அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வாக்கெடுப்புக்குட்பட்ட போடோலாண்ட் பகுதி கடந்த சில நாட்களில் ஆயுதக் குவியல்களை தொடர்ந்து கண்டறிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 நாட்களில் இப்பகுதியில் மூன்று பெரிய ஆயுதக் குவியல்கள் கண்டறியப்பட்டுள்ளன. கமிஷனர் முன்னா பிரசாத் குப்தா தலைமையில் குவஹாத்தி நகர காவல்துறையினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையில் உதல்குரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 13’ஆம் தேதி இரவு, முதல் முறையாக மிகப்பெரிய அளவிலான ஆயுதக் குவியல்கள் மீட்கப்பட்டன.

குவஹாத்தி போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள தகவலில், உதல்குரி காவல்துறையினருடன் ஒரு தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பெரிய ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாகவும், அவை காடுகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்டன எனக் கூறியிருந்தார்.

இந்த சரக்கு போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எஃப்.பி) எனும் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்பட்டாலும், விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் 16’ஆம் தேதி கோக்ராஜர் எஸ்.பி., ராகேஷ் ரூஷன் தலைமையிலான ஒரு நடவடிக்கையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களின் இரண்டாவது பெரிய குவியல் செர்பங்குரி பகுதியில் உள்ள காட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாவது பெரிய ஆயுதக் குவியல் நேற்று சிராங் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் சிராங் மாவட்டத்தின் கூடுதல் எஸ்.பி. தலைமையில் ஒரு தேடல் நடவடிக்கை ரணிக்கட்டா பகுதியில் தொடங்கப்பட்டது.

அங்கு எச்.கே. சீரிஸ் ரைஃபிள்ஸ், மேகஸின்கள் மற்றும் வெடிமருந்துகள், ஏ.கே. மேகஸின்கள் மற்றும் வெடிமருந்துகளுடன், சீன கைக்குண்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தும் காடுகளில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்தன.

மேலதிக விசாரணை நடந்து வருகிறது. போடோலாண்ட் பகுதியில் நிலுவையில் உள்ள சட்டவிரோத ஆயுத வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களில் மூன்று பெரிய மீட்டெடுப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் சில காரணிகளைக் கொண்டுள்ளன. 

எனினும் இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை மற்றும் இதுகுறித்து விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அசாமில் உள்ள போடோலாண்ட் பகுதி தீவிரவாதிகளின் மையமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0