கிராமத்துக்கு துரதிருஷ்டத்தை கொண்டுவந்ததாகக் கூறி பழங்குடிகள் அடித்துக் கொலை..!

Author: Sekar
3 October 2020, 4:38 pm
Local_tribals_Murdered_Rahimapur_village_Assam_UpdateNews360
Quick Share

அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு பெண் உட்பட இரண்டு பழங்குடியினர் கிராமத்திற்கு துரதிருஷ்டத்தை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டனர்.

இந்த குற்றத்தை கிராமத்தில் உள்ள சக ஆதிவாசிகளே செய்ததாகக் கூறப்படுகிறது. பலியானவர்கள் டோக்மோகா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ரஹிமாபூர் கிராமத்தில் வசிக்கும் 50 வயதான ராமாவதி ஹலுவா மற்றும் 30 வயதான பிஜாய் கோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியான இருவர் செப்டம்பர் 27 அன்று ஒரு சிறுமியின் மரணத்திற்கு பொறுப்பாக்கப்பட்டு இந்த கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கடந்த வியாழக்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது. இந்த குற்றம் தொடர்பாக இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரையும் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் நோயைப் பரப்பி கிராமத்திற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதாக தாங்கள் நினைத்தோம் என கைது செய்யப்பட்டவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்கள் முன்கூட்டியே திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை கைது செய்ய முயற்சி நடந்து வருகிறது” என்று எஸ்.பி. டெபோஜித் தியூரி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் அசாம் சூனிய வேட்டை (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் செப்டம்பர் 30’ஆம் தேதி மாவட்ட தலைமையகமான தீபுவிலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள ரஹிமாபூரில் நடந்துள்ளது. “இது சூனிய வேட்டைக்கான ஒரு வழக்கு என்று தோன்றுகிறது. வேறு காரணங்கள் இருந்தால், விசாரணையின் போது அவற்றைக் கண்டுபிடிப்போம்” என்று எஸ்.பி. மேலும் தெரிவித்தார்.

Views: - 47

0

0