பாலிவுட் #MeToo விவகாரம்..! நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே..!

22 September 2020, 10:24 pm
ramdas_athawale_updatenews360
Quick Share

நடிகை பயல் கோஷுக்கு இந்திய குடியரசுக் கட்சி பாதுகாப்பு அளிக்கும் என்றும், மும்பை காவல்துறை முழு விவகாரத்தையும் மிக விரைவாக விசாரித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான டாக்டர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை மாலை காஷ்யப்பிற்கு எதிராக பயல் கோஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் தனது ட்வீட்டில் இந்தியப் பிரதமர் அலுவலகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் அனுராக் காஷ்யப் மீது குற்றம் சாட்டியதோடு, இந்த குற்றச்சாட்டால் தனக்கு அச்சுறுத்தல் வரும் என அச்சம் கொள்வதாக தெரிவித்தார். 

இந்நிலையில் சிவசேனா கட்சியுடன் கடும் மோதலில் உள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் பயலுக்கு ஆதரவாக வந்து காஷ்யப்பை கைது செய்யக் கோரி ட்வீட் செய்துள்ளார்.

“ஒவ்வொரு குரலும் முக்கியமானது #MeToo #ArrestAnuragKashyap” என்று கங்கனா தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்துள்ளார். அவர் பயலின் பதிவையும் மறு ட்வீட் செய்தார்.

எனினும் இந்த விவகாரத்தில் பயல் கோஷ் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அனுராக் காஷ்யப் இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இந்த விவகாரத்தில் களமிறங்கியதோடு, தனது இந்திய குடியரசுக் கட்சி சார்பாக பயல் கோஷுக்கு பாதுகாப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் மும்பை காவல்துறை இதை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 10

0

0