செருப்பை கடித்த நாய்க்கு நேர்ந்த கொடூரம் : கேரளத்தில் மீண்டும் நடந்த சோகம்!!

19 April 2021, 12:37 pm
Dog Teased -Updatenews360
Quick Share

கேரளா : மலப்புரத்தில் செருப்பை கடித்ததற்காக நாயை இருசக்கர வாகனத்தில் கட்டி வைத்து சாலை இழுத்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடக்ரா என்ற பகுதியல் கான்ஸ்டன்ட் சேவியர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது செருப்பை நாய் ஒன்று கடித்து விட்டது.

இதனால் கோபடைந்த அவர், நாயை தன் பைக்கில் கட்டி வைத்து தரதரவென வேகமாக ஓட்டிச் சென்றார். இதில் சாலையில் சராய்ப்புகளில் சிக்கித்த தவித்த அந்த நாயின் கோரமான காட்சிகளை நேரில் பார்த்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார்.

பின்னர் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார், இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் சேவியர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சேவியர் குற்றவாளி என போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆனால் ஜாமீனில் சேவியர் வெளியே வந்தார். தற்போது படுகாயமடைந்த நாய்க்கு கால் நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கேரளாவில் புதிதல்ல, ஏற்கனவே தனது வீட்டில் வளர்த்த நாயை காரில் கட்டி வைத்து சாலையில் இழுத்து சென்ற உரிமையாளரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவம் நடந்த நான்கே மாதத்தில் மற்றொரு சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 169

1

1