ஆந்திரா அருகே கொடூரம் : 2 மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் வெட்டிக் கொலை!!

15 April 2021, 11:26 am
6 Murdered -Updatenews360
Quick Share

ஆந்திரா : ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் இரண்டு மாத கைக்குழந்தை, இரண்டு வயது குழந்தை உட்பட 6 பேரை வெட்டிக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜுட்டாடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ் என்பவர் தனது மனைவி உஷா, 2 வயது மகன் மற்றும் இரண்டு மாத கைக்குழந்தை விஷால் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு தன்னுடைய வீட்டில் குடும்ப உறுப்பினர்களுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது ராமாராவ் விட்டுக்குள் புகுந்தவர்கள் ராமாராவ், அவருடைய மனைவி உஷா அதே குடும்பத்தை சேர்ந்த ரமாதேவி, அருணா, 2 வயது மகன் உதய், இரண்டு மாத குழந்தை ஊர் விஷால் ஆகிய ஆறு பேரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து தப்பி சென்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்தநிலையில் ராமு குடும்பத்துடன் முன்பகை கொண்டிருந்த அப்பளராஜூ என்பவர் ஆறு பேரையும் கொலை செய்திருக்கலாம் என்று கருதும் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 37

0

0