மூளைச்சலவை செய்து பள்ளி மாணவர்களை மதம் மாற்ற முயற்சி : தனியார் பள்ளி மீது கல்வீசி தாக்குதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2021, 8:17 pm
School Religion Issue- Updatenews360
Quick Share

மத்தியபிரதேசம் : பள்ளி மாணவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்ற முயற்சிப்பதாக தனியார் பள்ளி மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மத்தியபிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 8 மாணவர்களை மத மாற்ற முயற்சித்ததாக ஒரு தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியேறினர்.

இந்த தாக்குதல் குறித்து முன்னதாகவே தகவ்ல கிடைத்ததும், போலீசாரிடம் புகார் அளித்து அலட்சியமாக இருந்ததாக பள்ளி தாளாளர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மற்ற பள்ளிகளுக்கும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் கொண்டு தேடி வருகின்றனர்.

Views: - 258

1

0