ஆன்லைன் விசாரணையின் போது சட்டையில்லாமல் வந்த வழக்கறிஞர் : உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்!!

2 December 2020, 11:26 am
SC - Updatenews360
Quick Share

ஆன்லைன் விசாரணையின் போது சட்டை அணியாமல் தோன்றிய வழக்கறிஞருக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று காணொலிக் காட்சி மூலம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடர்பான வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதிகள் எல்என் ராவ், ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதற்கான கேமராவை வழக்கறிஞர் ஒருவர் மேல் சட்டையின்றி சரி செய்து கொண்டிருந்தார், இதை பார்த்த நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக கடிந்தனர்.

இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற போது, வழக்கறிஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நீதிபதி சந்திரசூட் கூறியது குறிப்பிடதக்கது.

Views: - 0

0

0