ஏறுமுகத்தில் கொரோனா பாதிப்பு…! ஆக. 31 வரை போராட்டம் நடத்த ஹைகோர்ட் தடை
3 August 2020, 8:08 pmதிருவனந்தபுரம்: கேரளாவில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை போராட்டம் நடத்த ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கேரளா இப்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. தொடக்கத்தில் குறைவாக தான் பதிவானது கொரோனா தொற்று. பின்னர் படிப்படியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.
2 மாதங்களாக கொரோனா தினமும் உச்சத்தை தொட்டே இருக்கிறது. ஆனாலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும் கட்டுப்பாடுகளை மீறி போராட்டங்கள் நடைபெறுவதாக மாநில உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவாகின. அதையடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். மணிகுமார் தலைமையிலான அமர்வு ஜூலை 31ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.
இந் நிலையில், தொற்றுகள் அதிகரித்து வருவதால் கேரளாவில் பொது இடங்களில் நடைபெறும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆக. 31ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.