அயோத்தி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமருடன் யோகி ஆதித்யநாத் நாளை ஆலோசனை

Author: Udhayakumar Raman
25 June 2021, 10:48 pm
Quick Share

டெல்லி: அயோத்தியின் வருங்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை காணொலி மூலம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரவுள்ளன. உத்தரப் பிரேதச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து எளிதில் வருவதற்காக விமான மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அயோத்தி நவீனமயமாக்கும் திட்டம், உள்கட்டமைப்பு, ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட வருங்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு நாளை காணொலி மூலம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளிக்கவுள்ளார்.

Views: - 192

0

0