நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோவில் திறப்பு..? இந்தாண்டு இறுதியில் 2வது கட்டப் பணிகள் தொடங்கும் என தகவல்

Author: Babu
5 August 2021, 7:26 pm
Quick Share

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வரும் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து கடந்த 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம் 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது.

அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வரும் 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அடித்தளம் அமைக்கும் பணிகள் இந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் என்றும், தீபாவளிக்கு பிறகு 2ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே, அதாவது 2023 டிசம்பர் மாதத்திற்குள் கோவில் திறக்கப்படும் என்று கோவில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Views: - 244

1

0